துப்பாக்கி பிரயோகத்தில் தெய்வாதீனமாக உயிர்த்தப்பிய வர்த்தகர்
பேலியகொடவில் இரண்டு இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் தெய்வாதீனமாக காயமின்றி உயிர்த்தப்பியுள்ளார்.
சம்பவத்தின் போது பதிவான CCTV காட்சிகளின் படி, குறித்த வர்த்தகர் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த வேளையில், அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். எவ்வாறாயினும் இதன்போது விரைந்து செயற்பட்ட குறித்த வர்த்தகர் திடீரென வீட்டுக்குள் புகுந்து தன்னை பாதுகாத்துக் கொண்டுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக சந்தேக நபர்கள் இலக்கை தவறவிட்டனர். இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
