சீமெந்து விலையுடன் மணல் விலையும் அதிகரிப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூடை சீமெந்தின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு மூடை சீமெந்தின் புதிய விலை 2,850 ரூபாவாகும்.
அத்துடன் உள்நாட்டு சீமெந்து ஒரு மூடை 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, சீமெந்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு சீமெந்தினை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கம் கோரியுள்ளது.
1,375 ரூபாவிற்கு காணப்பட்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை தற்போது பாரியளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் மணலின் விலையும் அதிகரித்துள்ளதாக அவ் குறிப்பிட்டுள்ளார்.
