யாழ். மாவட்ட தேவாலயங்களில் பெரிய வெள்ளி தவக்கால கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்-

கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பலி இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

இவ் பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க நாவாந்துறை சென் நீக்கிலஸ் தேவாலயத்தில் மிகச்சிறப்பாக தவக்கால சிலுவைப்பாதையின் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

இவ் கூட்டுத்திருப்பலியினை பங்குமுதல்வர் அருட்பணி யேசுரட்ணம் அடிகளார்கள் தலைமையிலான அருட்சகோதர்கள் நடாத்திவைத்தனர்.

இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தவக்கால வாரம் கடந்த 18.03 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 17.04 அன்று உயிர்த்தஞாயிறு பெரும் கூட்டுத்திருப்பலியுடன் இனிதே நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24