மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

இயற்கை அபாய முன்னெச்சரிக்கை நிலையத்தினால் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று நண்பகல் ஒரு மணி தொடக்கம் இரவு 10 வரை இருக்கும் எனவும் , வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் அதிகூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் , மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.