சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்திற்கு கட்டார் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இப்படத்தில் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி கட்டார் அரசாங்கம் பீஸ்ட் படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காரணத்தை முன்வைத்து குவைத் அரசாங்கமும் பீஸ்ட் படத்தை வெளியிட தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது