மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட அசம்பாவிதம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் இந்த மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வித்தியாபுரம் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியதில் வீடொன்று சேதமடைந்துள்ளது.
அத்துடன், வீட்டு மின்னிணைப்பு பாதிக்கப்பட்டதுடன், வீட்டில் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் பொருட்கள் பலவும் சேதமடைந்துள்ளன.