இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களில் நிவாரண பொதி
அரிசி, பால்மா, சீனி, தேயிலை ஆகிய பொருட்கள் அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் இலங்கை சதொச விற்பனை நிலையங்களில் குறித்த நிவாரண பொதி விற்பனை செய்யப்படவுள்ளது
இவ் நிவாரண பொதியில், 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் ஐலண்ட் பால்மா, 1 கிலோ சிவப்பு சீனி, 100 கிராம் தேயிலை ஆகியன அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.