பிரதமரின் உருவம் பதித்த ஆயிரம் ரூபாவால் வந்த சண்டை
-யாழ் நிருபர்-
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் படம் பொறித்த ஆயிரம் ரூபாய் நாணயத்துடன் வருகை தந்த போது அங்கே குழப்ப நிலை ஏற்பட்டது.
‘மஹிந்த குடும்பத்தின் முகம் உள்ள காசு இங்கே ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மஹிந்தவே வீட்ட போகப் போகிறான், இந்த காசு எதற்கு? இந்த காசு இங்கே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, தயவு செய்துகாசை எடுத்துச் செல்லுங்கள்’ எனக் கூறி அந்த இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதால் குறித்த நபர் அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.