தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட 7 பேரின் உயிர்கள்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில், 7 பேர் தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

அம்பன் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம், பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது, மதகு ஒன்றுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, மதகு பாதுகாப்பு கற்கள் மூன்றினை உடைத்துக்கொண்டு, மின்சார கம்பம் மீது மோதி வாகனம், வயலிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த 7 பேருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் தெய்வாதீனாமாக உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பில் மருதங்கேணி பெலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.