திருமலையில் “சைவ சமயம் காத்தல்” : விக்கிரகங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினரால் புரியப்படும் அறப்பணிகளில் ஒன்றாக திருமலை மாவட்ட எல்லைக் கிராமங்களில் “சைவ சமயம் காத்தல்” எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை இந்து விக்கிரகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருக்கோணேஸ்வர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை தலைவர் சட்டத்தரணி திலகரெட்னம் துஷ்யந்தன் தலமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரால்குழி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முருகன் வள்ளி தெய்வயானை சிலைகளும், கணேசபுரம் கட்டைபரிச்சான் திருமுருகன் ஆலயத்துக்கு பிள்ளையார் சிலையும் , வெருகல் பிரதேச வாளைத் தோட்டம் ஆணைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தக்கு நவக்கிரக விக்கிரகங்களும் பூமரத்தடி சேனை நாகம்மாள் ஆலயத்துக்கு நாகலிங்க விக்கிரகமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இப்பிரதேச சிறிய ஆலயங்கள் மற்றும் அறநெறிகளுக்கும் அந்தந்த பகுதி கலச்சார உத்தியோகதர்கள் வழிகாட்டலில் கலாச்சார உடைகள் மற்றும் பூசை பயன்பாட்டு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான விக்கிரகங்கள் மற்றும் பொருள் அனுசரணையினை சுவிட்சர்லாந்து சூரிச் சித்திவிநாயகர் ஆலயத்தினர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.