ஜனநாயகனை கசியவிட்ட நபர்களை கண்டறிய தீவிர விசாரணை!

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் முழுமையாக கசிந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இத்திரைப்படத்தின் சில காட்சிகள் மாத்திரம் இணையத்தில் கசிந்திருந்தன.

எனினும், நேற்று முழுத் திரைப்படமும் சட்டவிரோதமான முறையில் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து படத்தின் தயாரிப்பு குழுவினர் வழங்கிய முறைப்பாட்டிற்கு இணங்க, தமிழக சைபர் குற்றத்தடுப்பு பொலிஸ் தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும், படத்தை இணையத்தில் கசியவிட்ட நபர்களைக் கண்டறிய விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.