
மன்னார்-இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு கௌரவிப்பு
-மன்னார் நிருபர்-
மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்னார் இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் சிறப்பு புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக, வணிகத் துறையில் இலுப்பைக்கடவை மகா வித்தியாலயத்தின் மாணவன் டி.டிதுர்சன் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றிருந்தார் .

அத்துடன் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவன் த.லினுசன் கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 12 நிலையையும் பெற்றிருந்தார்.
இவ் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.அந்தோணி வாஸ் ஜூட் தலைமையில் இடம்பெற்றது.

விழாவின் பிரதம விருந்தினர்களாக மடு கல்வி வலயத்தின் பணிப்பாளர் ஏ.சி.வலரென் மற்றும் ஸ்தாபனம் மற்றும் முகாமைத்துவத்தின் வலய பிரதிநிதி – ஜூட் இந்திரகுமா, தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஜெகன், வலயக் கல்வி ஆசிரிய ஆலோசகர் ஸ்டான்லின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் மாணவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

