
சட்ட நடவடிக்கை எடுத்தமைக்காக மன்னிப்பு கோரிய நுவான் துஷார!
2026 இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை (NOC) வழங்காமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தமைக்காக, இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் துஷார, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராகத் தான் தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
