புத்தாண்டு காலத்தில் இரண்டு தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படும்!

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மதுபானம் விற்பனை செய்வதற்கான மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களை மூடுவது தொடர்பாக மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்களில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என பிரதி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேரா அறிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் இடம்பெறும் மதுவரி குற்றங்கள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த முறை்பபாடுகளை சமர்ப்பிப்பதற்கு, திணைக்களத்தின் செயல்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துமாறு அந்த அறிக்கையில் மேலும் கோரப்பட்டுள்ளது.