உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பு!
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை பதிவாகியுள்ளது.
அதன்படி, தங்கத்தின் விலை 2.3% ஆல் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,811.66 அமெரிக்க டொலர்கள் எனும் சாதனை அளவை எட்டியுள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.
இதேவேளை ஏனைய உலோகங்களுக்கிடையில், வெள்ளியின் விலை 4.3 சதவீதத்தால் அதிகரித்து 76.08 டொலராக உயர்ந்துள்ளதுடன், பிளாட்டினம் மற்றும் பெலேடியம் ஆகியவற்றின் விலைகளும் சிறிதளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
