
டீசல் விலை அதிகரிப்பு!
லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது.
இதற்கமைய, டீசல் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 551 ரூபாவில் இருந்து 590 ரூபாயாக அதிகரிப்பு.
லங்கா சூப்பர் டீசல் (LSD) – 575 ரூபாவில் இருந்து 600 ரூபாயாக அதிகரிப்பு.
எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 588 ரூபாவில் இருந்து 620 ரூபாயாக அதிகரிப்பு.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விலைத் திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
