பாரஊர்தி ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில், செனன் பகுதியில் பார ஊர்தி ஒன்று, இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் விபத்துக்குள்ளானது.

குறித்த பாரஊர்தி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் எவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

விபத்து குறித்து ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.