தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்!

-மஸ்கெலியா நிருபர்-

கொழும்பு பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த அரச பேருந்து, கினிகத்தேன தியகலை கடவலை பகுதியில் வைத்து, பாரிய விபத்து ஒன்றிலிருந்து தப்பிய சம்பவம், கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து, ஹட்டன் நோக்கி பயணிக்கையில், எதிர்திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பாரஊர்திக்கு வழி விட முயன்ற போது, வீதியோரத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பி வேலியில் மோதி நின்றது.

அவ்வாறு குறித்த கம்பி வேலியில் தடைப்பட்டு நின்றிருக்காவிட்டால் பேருந்து பாரிய பள்ளத்தில் விழுந்திருக்கும்.

தெய்வாதீனமாக பேருந்தில் பயணித்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர், என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.