மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக, நகருக்குள் உள்நுழைந்த காட்டு யானை ஒன்று, விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை சேதப்படுத்தியதுடன், மதில்களையும், தென்னை மரங்கள், வாழை மரங்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது

செங்கலடி கறுத்தப்பாலம் பகுதியில், கடந்த சில தினங்களாக நிலை கொண்டுள்ள காட்டு யானை, சம்பவ தினமான இன்று அதிகாலையில், செங்கலடி பதுளை வீதியால் உள்நுழைந்து கடையை உடைத்து, அரிசி மூடைகளை சேதப்படுத்தியதுடன், பலன் தரும் மரங்களை உடைத்து தேசப்படுத்தியதையடுத்து அப்பகுதியில் இருந்து யானை விரட்டி அடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், அண்மை காலங்களாக, யானை தாக்குதல் வவுணதீவு, ஆயித்தியமலை, கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வரும் பலர் உயிரிழந்துள்ளதுடன், கிராம மக்கள் பயத்துடன் இரவு பொழுதை கழிக்க வேண்டிய நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

