
மூதூர் -இருதயநாதர் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனை
-மூதூர் நிருபர்-
மூதூர் -இருதயநாதர் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனை, அருட்தந்தை அண்டனி அமல்ராஜ் அவர்களினால் நடாத்தப்பட்டது.
இதன்போது, ஆலயத்திற்கு வெளியே புது நெருப்பு ஏற்றப்பட்டு அதிலிருந்து பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு பின்னர் பொது மெழுகுவர்த்திகள் ஏற்றினர்.
இவ் நள்ளிரவு ஆராதனையில் அதிகளவான கிறிஸ்தவ பக்த அடியார்கள் பங்கு கொண்டனர்
