யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைது!

-யாழ் நிருபர்-

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வடமராட்சி – நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து, போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் நபர், கைது செய்யப்பட்டுள்ளார்.

கரணவாய் பகுதியை சேர்ந்த, 21 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து 4 லட்சம் ரூபா பெறுமதியான 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, பருத்திதுறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்