தம்பலாகம் பிரதேச பிரஜா சக்தி தலைவர் அப்துல் முத்தலிப் ஜபருள்ளா மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.நஜிமுள்ளாவின் வேண்டுகோளின் பேரில், தம்பலகாமம் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல் முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ர ஜூனியர் வித்தியாலத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வெளிநாட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, தம்பலகாமம் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியம் (ESDF) தலைவர் ஏ எம்.எம்.நஸீர் , செயளாலர் அன்சார், மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில், பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டிட வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், கல்வி, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களை விரிவாக கலந்தூரையாடுவற்கு (ESDF) அமைப்புக்கு தனிப்பட்ட நாளொன்றை ஒதுக்கி வழங்குவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

