
டிரம்ப்பை கைவிட்ட நேட்டோ!
டொனால்ட் டிரம்பின் சுய பிடிவாதத்தில் பலியாகாமல் விலகிக்கொண்டு அவரை கைவிட்ட நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும்.
வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (NATO – (North Atlantic Treaty Organization) என்பது 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி (இன்று) ஐக்கிய அமெரிக்கா தலைமையில் வொஷிங்டன் டி சி யில் நிறுவப்பட்டது.
இது ஒரு சக்திவாய்ந்த அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணி ஆகும். இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு. ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்பது இதன் கூட்டுப் பாதுகாப்பு கொள்கையாகும்.
சோவியத் யூனியனின் அச்சுறுத்தலுக்கு எதிராக, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பின் தலைமையகம், பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
தற்போது நேட்டோ அமைப்பில் 32 உறுப்பு நாடுகள் உள்ளன. இறுதியான பின்லாந்து 2023 இல் இந்த அமைப்பில் இணைந்த கொண்டது.
நேட்டோவின் கூட்டுப்பாதுகாப்பு விதி படி, ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அது நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதி, உறுப்பு நாடுகள் இணைந்து பதிலடி கொடுக்கும்.
நெதர்லாந்தின் முன்னாள் பிரதமரான மார்க் ரூட்டே (Mark Rutte), 1 அக்டோபர் 2024 முதல் நேட்டோ அமைப்பின் 14-வது பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார்.
ஆகவே நேட்டோ அமைப்பில் ஒரு நாடு தாக்கப்பட்டால் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி, ஈரானுக்கு எதிரான போரில் நேட்டோ உறுப்பு நாடுகளை டிரம்ப் உதவிக்கு அழைத்தார்.
ஆனால், இது டிரம்பின் தனிப்பட்ட போர் என்று தெரிவித்து நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த போரிலிருந்து நழுவி விட்டன.
இதனால் பெரும் ஆத்திரமடைந்த டிரம்ப், நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
