இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்தது

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை காலை தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 1,000 ரூபாயால் அதிகரித்து 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 1,000 ரூபாயால் அதிகரித்து 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.