
ஏலத்தில் வரலாற்று சாதனை படைத்த ராஜா ரவி வர்மாவின் ஓவியம்!
புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா’ ஓவியம் மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் 167.20 (இந்திய ரூபாய்) கோடிக்கு விற்பனையாகிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் இந்தியக் கலை வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்பனையான கலைப்படைப்பு என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு எம்.எப்.ஹுசைனின் ‘கிராம யாத்திரை’ ஓவியம் 118 கோடிக்கு விற்பனையான சாதனையை ரவி வர்மாவின் இந்தப் படைப்பு முறியடித்துள்ளது.
இந்த ஓவியத்தைச் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அதார் பூனாவாலா ஏலத்தில் எடுத்துள்ளார்.
1890களில் வரையப்பட்ட இந்த ஓவியம், யசோதா பசுவிடம் பால் கறப்பதையும், குழந்தை கிருஷ்ணர் பின்னால் பால் கோப்பையுடன் நிற்பதையும் தத்ரூபமாகச் சித்தரிக்கிறது.
