
இன்றைய நீர் விநியோக தடை தொடர்பான அறிவித்தல்!
நாட்டின் பல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக பாதுக்கவில் நேற்று இரவு 8.00 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி வரையிலும், ஹோமாகமவில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை சனிக்கிழமை இரவு 8.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி முதல் 6 ஆம் திகதி இரவு 8.00 மணி வரையிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
மேலும், பத்தரமுல்ல, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவலச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, ஒரு நாள் தவிர ஏனைய நாட்களில் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை 3 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் சபை அறிவித்துள்ளது.
