கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாருக்கு குளவி கொட்டு!

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள, கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள், குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம், இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ரம்பொட வெதமுல்ல தோட்டப் பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்து வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அங்கு சென்ற போதே, திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட அதிகாரிகளின் 2 பேர் கொத்மலை வைத்திய சாலையிலும், மேலும் ஆபத்தான நிலையிலுள்ள 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் 03 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.