தங்கச் சங்கிலி விவகாரம் : பானுக்க ராஜபக்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

நடிகை ஹர்ஷி ரசங்க சமூக ஊடகங்களில் தனக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் குற்றம் சாட்டி, கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச அவருக்கு ஒரு சட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஹர்ஷி ரசங்க இந்த சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக பானுக குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பிட்ட தங்க சங்கிலி அடகு வைக்கப்பட்டதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பின்னர், சமூக வலைதளங்களில் அதற்கு முரணான கருத்துகளை நடிகை வெளியிட்டதாலேயே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பானுகவின் சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.

சுமார் 9 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தனது தங்கச் சங்கிலியை, ஹர்ஷி ரசங்க தனது அனுமதியின்றி பெற்று அடகு வைத்துள்ளதாக பானுக ராஜபக்ச முன்னதாக முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டநடிகை ஹர்ஷி ரசங்க, கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தங்கச் சங்கிலி அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டுத் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றில் பிரதிவாதி தரப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.