குழந்தை பருவத்தில் பெற்றோரை இழந்து வறுமையில் கற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகிய மூதூர் மாணவன்!

-மூதூர் நிருபர்-

மூதூரைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் முஹம்மது றுஷ்தி, விஞ்ஞானத்துறையில் மாவட்ட மட்டத்தில் 35வது நிலையைப் பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகியுள்ளார்.

இறுதி யுத்தத்தில் 2006 ஆம் ஆண்டில், மூதூர் பகுதியில் விமானத் தாக்குதலில் இவரின் தந்தை ஜெயினிதீன் முகம்மது அக்ரம் (மௌலவி), தாய், தந்தையின் சகோதரி என்போர் உயிரிழந்தனர்.

பின்னர் இவர் அப்பம்மாவின் வளர்ப்பிலும், இவரது சகோதார் அம்மம்மாவிடமும் அடைக்கலமானார்கள்.

அக்ரம் முகமட் றுஸ்தி, விதவைத்தாயான அப்பம்மா ஜெமிலா உம்மா நாளாந்தம் இடியப்பம் செய்யும் தொழில் செய்து அதில் கிடைக்கும் தினசரி வருமானத்தில் கல்வியினை தொடர்ந்தார்

இவர் கல்வியில் மாத்திரமல்ல, விளையாட்டு, மார்க்க விடயத்திலும் அதீத திறமையினையுடையவராவார்.

இவர் பல்வேறு இழப்புக்களையும், குடும்ப கஷ்டங்களையும் கடந்து தற்போது மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இரண்டாவது முறையாக உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய, திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவரான அக்ரம் முகமட் றுஸ்தி, ஏ, 2பி சித்திகளை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளார்.