
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி, மட்டக்களப்பு வவுனதீவில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஐயாதுரை கந்தசாமி (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கன்னங்குடா பகுதியை சேர்ந்த குறித்த நபர், உன்னிச்சை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றை காவல் காத்துக்கொண்டிருக்கும் போது, இவ்வாறு காட்டு யானையில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
