
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 30 முதல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி நீடிக்கப்படமாட்டாது என, பரீட்சைத் திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அரச பாடசாலை அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில், தற்போது 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
புலமைப்பரிசில் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு, 2027 ஜனவரி 31 ஆம் திகதியன்று மாணவரின் வயது 11 க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இக்கொடுப்பனவுகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கான மேலதிக அறிவுறுத்தல்களை https://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்:
விசேட தேவையுடைய மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கங்கள் இணையத்தளத்தில் உள்ள அறிவுறுத்தல் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும்:
தொலைபேசி எண்கள்: 0112 784 537 / 0112 786 616 / 0112 784 208 / 0112 786 200 / 0112 784 201
அவசர அழைப்பு எண்: 1911
பக்ஸ் : 0112 784 422
மின்னஞ்சல்: gr5schexam@gmail.com
