இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

-மஸ்கெலியா நிருபர்-

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில், செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கடந்த 29 ம் திகதி முதல் காணவில்லை என, அவரது குடும்பத்தினர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், ஹட்டன் வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.