காணாமல் போன குடும்பஸ்தரின் சடலம் கரையொதுங்கியது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த, சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம், இன்று செவ்வாய்க்கிழமை காலை பருத்தித்துறை வியாபாரி மூலை பகுதி கடலில் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த நபரை நேற்று திங்கட்கிழமையிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பருத்தித்துறை பொலிசார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.