
ஆலயத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் சடலமாக மீட்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகே, முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுதுமலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை, இணுவில் பகுதியில் சடலமாக காணப்பட்டார்.
சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை, சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
