தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் இன்று செவ்வாய்கிழமை, மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வு, இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவரும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத் மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை விரிவுரையாளர். நடராசா புஸ்பராசா, தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு, அன்னாரது நினைவு தூபிக்கு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.