திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -உப்பூறல் கடல்பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர், மீன்பிடி உபகரணங்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலை சர்தாபுர விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடி விதிமுறைகளை மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக சொல்லப்படும் சந்தேக நபர்களிடமிருந்து, 32 சிலிண்டர்கள், படகுகள், நிற வகை மீன்கள், கடல் அட்டைகள் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்களென தெரியவருகிறது.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.