நாடாளுமன்ற உறுப்பினர் செலுத்திய வாகனம் விபத்து

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் பைசல் செலுத்திய வாகனம், சிலாபம் பகுதியில் உள்ள பண்டாரவத்தை வளைவில், வீதியிலிருந்து விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தால் வாகனத்திற்கும், சுவருக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11:45 மணியளவில் நிகழ்ந்ததாகவும், அப்போது அந்த வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்