கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!
பிங்வத்த, லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர் ஒருவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பிங்வத்த, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பிங்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
