சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் உயிரிழப்பு!

-மஸ்கெலியா நிருபர்-

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண், உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது, என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள இம்புல்கொட பகுதியை சேர்ந்த, தமயந்தி (வயது 65) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், கடந்த 28 ஆம் திகதி இரவு தனது குடும்பத்துடன் சிவனொளிபாத மலைக்கு சென்று, தரிசனம் செய்த பின்னர் மீண்டும் திரும்பி வரும் போது, மாகிரிதம்ப பகுதியில் வைத்து திடீரென சுகவீனம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.