மண்டூர் மதி ஒளி விளையாட்டுக் கழகத்தின் 62வது ஆண்டு நிறைவு : உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி
மண்டூர் மதி ஒளி விளையாட்டுக் கழகத்தின் 62வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியும், கௌரவிப்பு நிகழ்வும் இன்றைய ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கழகத் தலைவர் ந.பாஸ்கரன் தலைமையில், பிற்பகல் 02.00 மணியளவில் மண்டூர் மதி ஒளி விளையாட்டுக் கழக மைதானத்தில் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வின் தொடக்கத்தில் அதிதிகள் கௌரவத்துடன் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், தேசியக் கொடி மற்றும் கழகக் கொடி ஏற்றல் ஆகியன இடம்பெற்றன.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கழகத்தின் புதிய கழக கீதம் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வரவேற்புரை மற்றும் தலைமையுரையைத் தொடர்ந்து, விறுவிறுப்பான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் அரை இறுதிப் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற பாலமுனை கருணாகரன் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டதோடு, தொடர்ந்து 5ஆம் தர புலமைபரீட்சை, க. பொ. த சாதாரண மற்றும் உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் சிறப்பு அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் , விசேட அதிதிகளாக போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் எஸ்.கமல்ராஜ், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாந்த டீ சில்வா, வைத்திய அதிகாரி பு. நிருஷன், அழைப்பு அதிதியாக மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வண்ணக்கர் பொ.செல்வக்குமார்,அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள்இ முன்னாள் உறுப்பினர்கள்,கழக ஆலோசகர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






