
பாடசாலை பைகளுடன் களமிறங்கிய ஈரான் கால்பந்து வீரர்கள்!
ஈரானின் மினாப் நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈரான் கால்பந்து வீரர்கள் மேற்கொண்ட செயல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மையில் மினாப் நகர் பாடசாலை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பல அப்பாவி குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது கண்டனத்தையும், உயிரிழந்த குழந்தைகளுக்குத் தனது அஞ்சலியையும் வெளிப்படுத்தும் விதமாக ஈரான் தேசிய கால்பந்து அணி வீரர்கள் ஒரு விசேட முன்னெடுப்பை மேற்கொண்டனர்.
தமது அடுத்தப் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேளையில் வீரர்கள் ஒவ்வொருவரும் கைகளில் பாடசாலைப் பைகளை (School Bags) ஏந்தியவாறு நின்றனர்.
உயிரிழந்த மாணவர்களின் நினைவாகவும், போரினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலையை உலகுக்கு உணர்த்தவும் இந்த உருக்கமான அஞ்சலி செலுத்தப்பட்டது.
