முரசுமோட்டை ஊரியான் பகுதியில் உள்ளூர் மஞ்சள் இன அறுவடை நிகழ்வு

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிமூலம் செய்கை மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் அறுவடை நிகழ்வு, கிளிநொச்சி மாவட்டத்தில் , முரசுமோட்டை ஊரியான் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை, இ.இராசரத்தினம் என்ற விவசாயின் வயலில் நடைபெற்றது.

கால் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் மஞ்சள் இன அறுவடை நிகழ்வானது கண்டாவளை விவசாய போதனாசிரியர் க.தனுசீலன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி, கண்டாவளை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சற்குணநேசன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.