ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்தால் கடும் நடவடிக்கை – IRGC எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் “கடுமையான நடவடிக்கைகளை” எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

எதிரி நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை, அந்தப் பாதையைக் கடக்க முயன்ற மூன்று கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாகவும் கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிய பொய்களைத் தொடர்ந்து,” அந்த கப்பல்கள் நீரிணையைக் கடக்க முயன்றதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது.