45 மில்லியன் செலவில் நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ஒருங்கிணைந்த நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ திட்டத்தின் கீழ், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள பரவி பாஞ்சான் நீர்ப்பாசனத் திட்டத்தின் சாலியபுர அணையில் அமைப்பு நவீனமயப்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர் பாசன அமைச்சின் நிதியுதவியுடன் ரூபாய் 45 மில்லியன் செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மாகாண நீர்ப் பாசனத் திணைக்களத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதேச மக்களின் பங்கேற்புடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

