சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி துறவி ஒருவர் உயிரிழப்பு!

குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் தங்கியிருந்த துறவி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த துறவி செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.