வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு

வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம், மக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக, இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.எம். முகமட் ராஷிக் ஏற்பாட்டில், வாழைச்சேனை மாவட்ட நீதான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.ரதீப் அகமட் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.றியாழ், மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ஐ.பயாஸ் றஸ்ஸாக் மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரனால் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு, நீதிபதி ஏ.எச்.எம்.றியாழ் நாடா வெட்டி, நீதிமன்ற கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது.