
நுவரெலியாவிற்கு பயணம் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், இன்று புதன்கிழமை காலை பதிவான தரவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் ஏனைய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்த வெப்பநிலையே காணப்பட்டது.
இதன்படி பண்டாரவளையில் 14.0°C, பதுளையில் 17.5°C மற்றும் கடுகஸ்தோட்டையில் 19.7°C என பதிவாகியுள்ளது.
மலைநாட்டிற்கு நேர்மாறாக, கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் ஓரளவு வெப்பமான வானிலை நிலவியது.
இதன்படி முல்லைத்தீவில் 27.4°C பதிவாகியுள்ளதுடன், கொழும்பில் 26.2°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தற்போதைய வானிலை மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து அவதானித்து வருவதுடன், மலைநாட்டிற்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிலவும் கடும் குளிருக்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
