
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மேலதிக வைத்தியப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
