
தனியார் காணியில் இருந்து சிசுவின் உடலம் மீட்பு
மீகஸ்வெவ, பள்ளியகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து பெண் சிசு ஒன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிசுவின் உடலத்தை மீட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்த பெண் சிசு உயிரிழந்து சுமார் இரண்டு நாட்கள் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடத்திற்கு வருகை தந்த நீதவான், ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். இதனைத் தொடர்ந்து, மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக சிசுவின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
குறித்த சிசுவின் பெற்றோர் யார்? எதற்காக சிசு கைவிடப்பட்டது? என்பது குறித்த மேலதிக விசாரணைகளை மீகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த நிலையில் சிசு மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
