
மட்டு.போதனா வைத்தியசாலையில் தாக்குதல் சம்பவம் : ஒருவர் கைது – இருவர் தலைமறைவு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், மருந்தாளராக பணியாற்றும் ஊழியர் மீது, வைத்தியசாலையின் காவலாளிகள் மூவர் தாக்குதல் நடத்தியதில், குறித்த ஊழியர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த மருந்தாளர், தனது வாகனத்தை வாகன தரிப்பிடத்தில் நிறுத்த சென்ற போது, அங்கு வாகனத்தை நிறுத்த வேண்டாமென காவலாளி தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகபர்களான மூன்று காவலாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் தலைமறைவாகியுள்ளனர்.
மேலதிக விசாரலணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
